/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வட்டி கேட்டு துன்புறுத்தல் பட்டறை ஓனர் விபரீதம்
/
வட்டி கேட்டு துன்புறுத்தல் பட்டறை ஓனர் விபரீதம்
ADDED : ஜன 21, 2025 06:36 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் செல்வகுமார், 33. இவரது மனைவி திவ்யா; தம்பதியருக்கு, 2 பெண் குழந்தைகள். செல்வகுமார், கட்டனாச்சம்பட்டியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். நேற்று மதியம், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்-பத்தினர், அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, துாக்கில் தொங்கியவாறு
இருந்த செல்வகுமாரை கண்டு அதிர்ச்சியடைந்-தனர். ராசிபுரம் போலீசார் விசாரணையில், தற்கொலை செய்வதற்கு முன், செல்வகுமார் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். அதில், 'தனக்கு ராசிபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும்,
அதற்கு தொடர்ந்து வட்டி கட்ட சொல்லி துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் மனமு-டைந்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன். மேலும், தன்னுடைய சாவுக்கு மாரிமுத்து தான் காரணம்' எனவும் குறிப்-பிட்டுள்ளார்.
இதுகுறித்து மாரிமுத்துவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

