தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ எக்ஸல் பொறியியல் கல்லுாரியில்பயிலரங்கம், செயல்முறை பயிற்சி

எக்ஸல் பொறியியல் கல்லுாரியில்பயிலரங்கம், செயல்முறை பயிற்சி

எக்ஸல் பொறியியல் கல்லுாரியில்பயிலரங்கம், செயல்முறை பயிற்சி


ADDED : ஏப் 28, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்:குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லுாரியில், மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவனம் சார்பில், 'ஸ்மார்ட் ஹோம் ஆட்டோமேஷன்' குறித்து ஒருநாள் தேசிய அளவிலான பயிலரங்கம் மற்றும் செயல்முறை பயிற்சி நடந்தது.

தொழில்நுட்ப வளாக செயல் இயக்குனர் மற்றும் பொறியியல் கல்லுாரி முதல்வர் பொம்மண்ணராஜா, எக்ஸல் பொறியியல் கல்லுாரி டீன் (நிர்வாகம்) அன்பு கருப்பசாமி, டீன் (கல்வியியல்) கார்த்திகேயினி, மின் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பள்ளியின் டீன் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவன மாணவர் பிரிவின் ஆலோசகர் ஜீவானந்தம், துறை ஒருங்கிணைப்பாளர் பானுரேகா ஆகியோர் தலைமையின் கீழ், எக்ஸல் பொறியியல் கல்லுாரியின் மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவன மாணவர் பிரிவு மற்றும் வள நபர் வெற்றிவேல், மேலாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவு, சால்சர் எலக்ட்ரானிக்ஸ் லிட், கோவை ஆகியோர் இணைந்து, ஒருநாள் தேசிய அளவிலான பயிலரங்கம் மற்றும் செயல் முறை பயிற்சியை சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த பயிலரங்கம், 'ஸ்மார்ட் ஹோம் ஆட்டோமேஷன்' என்ற மையக்கருத்தை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 17 கல்வி நிறுவனங்களிலிருந்து, 113 மாணவர்கள் பதிவு செய்து பங்கேற்றனர். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்களான மேகநாதன், மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவன மாணவர் பிரிவின் கிளைத்தலைவர் லெனின்குமார், மாணவர் கிளை செயல்பாட்டு உறுப்பினர் மற்றும் பிற மாணவர் தன்னார்வலர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us