/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு மாரத்தான்
/
உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : டிச 26, 2024 01:19 AM
உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு மாரத்தான்
நாமக்கல், டிச. 26-
ஒவ்வொரு ஆண்டும் டிச., 1ல் உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நாமக்கல் மாவட்டத்தில் டிச., 1ல் நடத்தப்பட வேண்டிய எய்ட்ஸ் தின விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, அப்போது பெய்த தொடர் மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள நளா ஓட்டல் முன் மாரத்தான் போட்டி தொடங்கியது. பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 7 கி.மீ., 5 கி.மீ., 3.கி.மீ., 2 கி.மீ., 600 மீட்டர் என்ற அடிப்படையில் நடந்த போட்டியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, பெடரல் வங்கி நிர்வாகத்தினர், மாவட்ட தடகள சங்கம் உள்ளிட்ட தனியார் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

