/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா; அமைச்சர் நலத்திட்டம் வழங்கல்
/
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா; அமைச்சர் நலத்திட்டம் வழங்கல்
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா; அமைச்சர் நலத்திட்டம் வழங்கல்
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா; அமைச்சர் நலத்திட்டம் வழங்கல்
ADDED : டிச 04, 2025 06:00 AM
நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் அரசு சட்டக்கல்லுாரி கலையரங்கில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், 27 மாற்றுத்திறனாளிகளுக்கு, 8.75 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
அப்போது, அவர் பேசியதாவது: ஆண்டுதோறும், டிச., 3ல், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும், தங்கள் உரிமைகளை பெற வைப்பது ஒரு சமுதாய கடமை என, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம். மாற்றுத்திறனாளிகளை தனியாக பிரிக்காமல், அவர்களை சமூகத்தின் அங்கமாக அங்கீகரித்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழக உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் இத்திட்டம் முதன்முறையாக செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் அருண், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

