நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம் :உலக பட்டினி தினத்தையொட்டி, குமாரபாளையம் த.வெ.க., சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பஸ் ஸ்டாண்ட் மற்றும் கவுரி தியேட்டர் அருகில், 2,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, சக்திவேல் கூறுகையில், ''த.வெ.க., நிறுவனர் விஜய் ஆணைப்படி, உலக பட்டினி தினத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் பெற்ற பொதுமக்கள், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்தல் சமயத்தில் தலைவர் சொற்படி பணியாற்றி, தலைவருக்கு வெற்றியை தேடி தருவோம்,'' என்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சாந்தி, நகர பொருளாளர் சோமு, வார்டு செயலர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.