ADDED : செப் 18, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்;உலக ஓசோன் தினத்தையொட்டி, குமார பாளையம் விடியல் ஆரம்பம் சார்பில்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அமைப்பாளர்
பிரகாஷ் தலைமை வகித்து பேசினார். பின்னர், மாணவ, மாணவியருக்கு ஓவியப்
போட்டி, பேச்சு போட்டி நடத்தப்பட்டன. பின்னர் போட்டிகளில் வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
சுற்றுச்சூழலை பாதுகாப்போம், இயற்கையை நேசிப்போம் என உறுதிமொழி
ஏற்றுக்கொண்டனர். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீடு வீடாக
சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில்
ஆசிரியை கவுடேஸ்வரி, சமூக ஆர்வலர்கள் ஜமுனா, தீனா உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
