தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உலக மருந்தாளுனர் தின விழா

உலக மருந்தாளுனர் தின விழா

உலக மருந்தாளுனர் தின விழா


ADDED : செப் 26, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்:உலகம் முழுவதும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பில் மருந்தாளுனர்களின் இன்றியமையாத பங்களிப்பை போற்றும் வகையில், ஆண்டுதோறும் செப்., 25ல், உலக மருந்தாளுனர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, ராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருந்தக வளாகத்தில், உலக மருந்தாளுனர் தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, எம்.ஓ., கலைச்செல்வி தலைமை வகித்தார்.

மருந்தாளுனர்கள் தருண், ஷாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற தலைமை மருந்தாளர் ராஜு அனைவரையும் வரவேற்றார். உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் ரேவதி, தலைமை செவிலியர்கள் சுதா, மகாலட்சுமி மற்றும் முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினருமான பாலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us