/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் உலக சிலம்பம் சாதனை திருவிழா
/
நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் உலக சிலம்பம் சாதனை திருவிழா
நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் உலக சிலம்பம் சாதனை திருவிழா
நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் உலக சிலம்பம் சாதனை திருவிழா
ADDED : டிச 15, 2024 01:25 AM
நாமக்கல், டிச. 15-
நாமக்கல், காவேட்டிப்பட்டியில் செயல்படும் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் படிப்பில் சாதனை படைத்து வருகின்றனர். அது மட்டுமின்றி, விளையாட்டு துறைகளிலும் அதிக சாதனை படைத்து வருகின்றனர். சேலம், மேச்சேரி சிலம்ப கலைக்கூடம் மற்றும் அகாடமி ஆப் இந்தியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சியில், 2,000 பேர் ஒரே இடத்தில் கலந்துகொண்டு, 15க்கும் மேற்பட்ட உலக சாதனைகள், 'ஒரே நாள், ஒரே நேரம், ஒரே இடத்தில்' நடத்தி காட்டினர்.
இதில், பொது பிரிவில், சிலம்பம் போட்டியில் மாணவ, மாணவியர் சாதனை படைத்தனர். அவர்களை, குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தங்கவேல், பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், தலைமை ஆசிரியர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.