/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரியில் உலக மாணவர் தினம்
/
அரசு கல்லுாரியில் உலக மாணவர் தினம்
ADDED : அக் 16, 2024 07:24 AM
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, யூத் ரெட் கிராஸ், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சுருள் சங்கம் மற்றும் உள் தர உறுதி மையம் சார்பில், உலக மாணவர் தின நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ) ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தார்.
மாணவ, மாணவியர் கல்வி, விளையாட்டு, ஒழுக்கம், சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றில் சிறந்து விளங்க வேண்டும்; நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என, உறுதிமொழி ஏற்றனர். யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வெஸ்லி, உள்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் பாபு, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் விஜயலட்சுமி, அன்பரசன், தேசிய மாணவர் படை அலுவலர் சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் செய்திருந்தார்.