/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 18, 2025 02:03 AM
நாமக்கல் :நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியின், யூத் ரெட் கிராஸ் சார்பில், 'உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி' நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர்(பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தர். மாவட்ட மனநல மருத்துவர் இந்துமதி, 'தற்கொலை குறித்த கண்ணோட்டத்தை மாற்றி அதைப்பற்றி பேச தொடங்குவோம்' என்ற தலைப்பில் பேசினார்.
அதில், மன அழுத்தம், சோர்வு, ஏமாற்றம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் இடம் பெறக்கூடாது. ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன், உணர்ச்சிப்பூர்வமாக, தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை எண்ணம் கொண்ட நபர்களை எவ்வாறு அடையாளம் காணலாம்; அவர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுக்க எப்படி உதவலாம் என்பது குறித்தும் பேசினார்.தொடர்ந்து, தற்கொலை தடுப்பு குறித்து போஸ்டர் உருவாக்குதல், கவிதை, குறுங்கதை எழுதுதல், வீடியோ தயாரித்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.
.