/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக தற்கொலை தடுப்பு தினம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
/
உலக தற்கொலை தடுப்பு தினம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
உலக தற்கொலை தடுப்பு தினம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
உலக தற்கொலை தடுப்பு தினம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 14, 2024 07:11 AM
நாமக்கல்: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாநகராட்சி, மோகனுார் சாலை, புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். சுகாதார நிலையத்தில் துவங்கி, மோகனுார் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், திருச்சி சாலை, மணிக்கூண்டு வழியாக சென்று மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது.
பேரணியில், துணை செவிலியர்கள் பயிற்சி பள்ளி மாணவியர், பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் பயிற்சி பள்ளி மாணவியர், கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை கல்லுாரி மாணவியர், அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, உலக தற்கொலை தடுப்பு தின உறுதிமொழியை ஏற்றனர். மேலும், உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த, 'செல்பி' ஸ்டேண்டில், கலெக்டர் உமா புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக, உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்குமார், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.