/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக தண்ணீர் தின விழா; எம்.பி., பங்கேற்பு
/
உலக தண்ணீர் தின விழா; எம்.பி., பங்கேற்பு
ADDED : மார் 24, 2025 06:31 AM
மோகனுார்: உலக தண்ணீர் தினத்தையொட்டி, மோகனுார் தாலுகா, ஆண்டாபுரம் பஞ்., வெள்ளாளப்பட்டி கிராமத்தில், தனியார் வங்கியின் சமூக பொறுப்பு திட்டம் மூலம், 9,000 மரக்கன்றுகளை பஞ்சாயத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் ஆண்டாபுரம், சின்னப்பத்தம்பட்டி பஞ்., துாய்மை பணிக்காக பேட்டரி வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது.
நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், பேட்டரி வாகனங்களை வழங்கினார். தனியார் வங்கி அலுவலர்கள் ராஜேஸ்வரி, நவராஜா, சதீஷ்குமார், கொ.ம.தே.க., மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், மோகனுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.