/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உலக ஈர நிலம் தினம்' ஓவியம், பேச்சு போட்டி
/
'உலக ஈர நிலம் தினம்' ஓவியம், பேச்சு போட்டி
ADDED : ஜன 20, 2024 09:55 AM
நாமக்கல்: ஒவ்வொரு ஆண்டும் பிப்., 2ல், 'உலக ஈர நிலங்கள்' தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியம், பேச்சு போட்டி நடத்தப்பட்டது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்த ஓவிய போட்டியில், 23 பேரும், பேச்சு போட்டியில், 15 பேரும் கலந்து கொண்டனர்.
ஈரநிலம் மற்றும் மனித நல்வாழ்வு என்ற தலைப்பில் போட்டி நடந்தது.
ராசிபுரம் வட்டம், அத்தனுாரில் உள்ள வனத்துறை பயிற்சி அலுவலகத்தில் கல்லுாரி மாணவர்களுக்கான போட்டி நடந்தது. நாமக்கல் வனச்சரக அலுவலர் பெருமாள், ராசிபுரம் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வன ஊழியர்கள் பார்வையிட்டனர். வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, பிப்., 2ல் நடக்கும் வனத்துறை விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளது.