/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கார்த்திகை சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழிபாடு
/
கார்த்திகை சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழிபாடு
கார்த்திகை சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழிபாடு
கார்த்திகை சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழிபாடு
ADDED : டிச 07, 2024 06:57 AM
நாமக்கல்: கார்த்திகை வளர்பிறை சஷ்டியையொட்டி, நாமக்கல் - மோகனுார் சாலை, காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜை, 10:30 மணிக்கு உற்சவர் பூஜை, சுப்ரமணியர் ஹோமம், 11:30 மணிக்கு பாலதண்டாயுத-பாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில், மகா
தீபாராதனை நடந்தது.
* நாமக்கல் - கடைவீதி, சக்தி விநாயகர் கோவிலில் பாலதண்டா-யுதபாணி சுவாமி ராஜ அலங்காரத்திலும்; மோகனுார் -
நாமக்கல் சாலையில் உள்ள, காந்தமலை பாலசுப்ரமணியர், தங்க கவசத்-திலும்; நாமக்கல் - சேலம் பைபாஸ் சாலையில்
உள்ள தண்டாயு-தபாணி கோவிலில், ராஜ அலங்காரத்திலும்; நாமக்கல் - துறையூர் சாலை, ரெட்டிப்பட்டி, கந்தகிரி
பழனியாண்டவர் கோவிலில், சுவாமி திருநீறு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.* சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கூலிப்பட்டி பழனியாண்டவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.* ப.வேலுார் சுல்தான்பேட்டையில் உள்ள பாலமுருகன், பாண்ட-மங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில், கபிலர்மலை
பாலசுப்-ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனுார் பச்சைமலை முருகன்,
அனிச்சம்பா-ளையம் சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்மலை முருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில்,
சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.