/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடு
/
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடு
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடு
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடு
ADDED : மார் 25, 2024 07:19 AM
ப.வேலுார் : பங்குனி உத்திரத்தையொட்டி, ப.வேலுார் பேட்டை பகவதியம்மன் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின், பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், ப.வேலுார் அருகே நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் உள்ள ராஜா சுவாமி, ப.வேலுார் தெற்கு நல்லியம்பாளையத்தில் உள்ள முருகன் சன்னதியில் பங்குனி உத்திர விழா நடந்தது.