ADDED : ஜூலை 08, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. ஈரோட்டிற்கு அடுத்தபடியாக பெரிய மஞ்சள் மார்க்கெட் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகள், ஆர்.சி.எம்.எஸ்., மூலம் வாரந்தோறும், 50 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் விற்பனை நடக்கிறது. நேற்று, ஈரோட்டை சேர்ந்த மஞ்சள்  வியாபாரி இறந்ததால், இன்று ஆர்.சி.எம்.எஸ்.,சில் நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
அடுத்த வாரம் செவ்வாய் கிழமை வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடக்கும் என, ஆர்.சி.எம்.எஸ்., நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், வரத்து குறைந்ததால்  மஞ்சள்  ஏலம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் தொடர்ந்து இரண்டு வாரம்  மஞ்சள்  ஏலம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

