/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எக்ஸல் யோகா கல்லுாரியில் யோகா நெறிமுறை நிகழ்ச்சி
/
எக்ஸல் யோகா கல்லுாரியில் யோகா நெறிமுறை நிகழ்ச்சி
ADDED : ஜூன் 23, 2025 05:07 AM
குமாரபாளையம்: சர்வதேச யோகா தினத்தையொட்டி, குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின், எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்-துவ கல்லுாரி மற்றும் சேலம் ஸ்டீல்
அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் இணைந்து, பொதுவான யோகா நெறிமுறை மற்றும் செயல் விளக்கம் குறித்த நிகழ்ச்சியை நடத்தின.
கல்லுாரி முதல்வரும், மருத்துவ கண்காணிப்பாளருமான டாக்டர் மாலதி மற்றும் டாக்டர்கள் சிவராமன், செபின் பாபி, தீபிகா, பூபதி மற்றும் 2019ல் பயின்ற, பத்து பயிற்சி டாக்டர்கள் அடங்-கிய குழுவினர், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி கலந்து-கொண்டு யோகா செய்து சிறப்பித்தார். சேலம் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்டின் இயக்குனர், எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரியின் முதல்வர் மாலதி மற்றும் யோகா செய்து காட்டிய மாணவர்கள் குழுவுக்கு நன்றி தெரி-வித்தார்.