/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவாகரத்து பெற்ற மனைவியை தாக்கிய வாலிபர் அதிரடி கைது
/
விவாகரத்து பெற்ற மனைவியை தாக்கிய வாலிபர் அதிரடி கைது
விவாகரத்து பெற்ற மனைவியை தாக்கிய வாலிபர் அதிரடி கைது
விவாகரத்து பெற்ற மனைவியை தாக்கிய வாலிபர் அதிரடி கைது
ADDED : பிப் 14, 2025 07:21 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, விவாகரத்து பெற்ற மனைவியை, போதையில் சென்று தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன்குறிச்சி, செங்காட்டுபுதுாரை சேர்ந்த கந்தசாமி மகள் ஸ்வேதா, 30, சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், தனது தாய் புஷ்பராணியுடன் தாத்தா சுந்தரம் வீட்டில் வசித்து வருகிறார். சென்னையில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் வீட்டில் உள்ளார்.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் ஒடுவன்குறிச்சி செட்டியார் தெருவை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் பார்த்திபனை, 34, ஸ்வேதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமானதில் இருந்து, பார்த்திபன் வேலைக்கு செல்லாமல் ஸ்வேதாவிடம் பணம் வாங்கி மது குடித்து வந்துள்ளார். இதனால், அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்றம் மூலம் கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்வேதா வீட்டிற்கு சென்ற பார்த்திபன், பணம் கேட்டு மிரட்டியதுடன் ஸ்வேதாவை தாக்கியுள்ளார். தடுக்க வந்த அவரது தாய் புஷ்பராணியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசில் ஸ்வேதா அளித்த புகார்படி, பார்த்திபனை போலீசார் கைது செய்தனர்.

