/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கந்தம்பாளையம் அருகே கள்ளக்காதலி தற்கொலை: இளைஞர் கைது
/
கந்தம்பாளையம் அருகே கள்ளக்காதலி தற்கொலை: இளைஞர் கைது
கந்தம்பாளையம் அருகே கள்ளக்காதலி தற்கொலை: இளைஞர் கைது
கந்தம்பாளையம் அருகே கள்ளக்காதலி தற்கொலை: இளைஞர் கைது
ADDED : ஜூலை 20, 2025 05:38 AM
ப.வேலுார்: வெளியூரில் உள்ள மனைவி, குழந்தையை பார்க்க செல்வதாக கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கள்ளக்காதலி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விசாரணையில், கள்-ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
-நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே, நடந்தை மேட்-டுப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 39; ரிக் வண்டி டிரைவர். இவரது மனைவி விஜயராணி, 30; தம்பதியருக்கு, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர், ராஜ் மகன் சதீஷ், 26; பால் வியாபாரி. அப்ப-குதி விவசாயிகளிடம் பால் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு, இரண்டு மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில், சக்திவேல் ரிக் வண்டியில் வேலை பார்க்க, வெளிமாநிலங்களுக்கு மாத கணக்கில் சென்று விடுவார். அப்-போது, விஜயராணிக்கும், சதீஷுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்-டது. கடந்த, 10ல் விஜயராணி, மருத்துவமனைக்கு செல்வதாக கணவர் சக்திவேலிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. மனைவியை காணவில்லை என, நல்லுார் போலீசில், சக்திவேல் புகாரளித்தார். புகார்படி, நல்லுார் போலீசார், விஜயராணியிடம் அடிக்கடி மொபைல் போனில் பேசி-யது யார் என, விசாரணை மேற்கொண்டனர். அதில், பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்த போலீசார், அவரளித்த தகவல்படி, நேற்று விஜயராணியின் உடலை மீட்டனர்.
இதையடுத்து, போலீசில் சதீஷ் அளித்த வாக்குமூலம்:
விஜயராணிக்கும், எனக்கும் கடந்த, மூன்றாண்டாக கள்ளத்தொ-டர்பு இருந்தது. இருவரும், நடந்தை அருகே, கோணங்காடு பகு-தியை சேர்ந்த பத்தியப்பா என்ற விவசாயியின் தோட்டத்தில் பகலில் சந்தித்துக்கொள்வோம். சம்பவத்தன்று, விஜயராணி போனில் அழைத்ததால் அங்கு சென்றேன். அப்போது, வெளி-யூரில் உள்ள மனைவியையும், குழந்தையும் பார்க்க செல்வதாக கூறினேன். அதற்கு விஜயராணி, 'நீங்கள் செல்லக்கூடாது' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பீர் பாட்டிலை உடைத்துக்-கொண்டு, 'நான் தற்கொலை செய்து கொள்வேன்' என மிரட்-டினார்.
நான், 'மனைவியை பார்க்க செல்கிறேன்' என கூறிவிட்டு, அந்த இடத்தில் இருந்து வந்து விட்டேன். மாலை, விஜயராணி வீட்-டுக்கு சென்று பார்த்தபோது வீடு திரும்பாதது தெரியவந்தது. மீண்டும், சந்தித்த இடத்துக்கே சென்று பார்த்தபோது, விஜயராணி துாக்கிட்ட நிலையில் இருந்தார். அவரை கீழே இறக்கி பார்த்த-போது, இறந்து பல மணி நேரம் ஆனது தெரியவந்தது. உடனடி-யாக அங்கிருந்த அவரது துணிமணி, மொபைல்போனை எடுத்து, அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு வீடு திரும்பினேன். போலீசார், மொபைல்போன் மூலம் எங்களது தொடர்பை அறிந்து கொண்டனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நேற்று சதீஷை கைது செய்த நல்லுார் போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகு-தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.