/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உறவினர் வீட்டில் திருடிய வாலிபர் கைது
/
உறவினர் வீட்டில் திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூன் 30, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன், 25; கட்டட தொழிலாளி.
இவரது உறவினர், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், வெப்படை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஹரிஹரன் வந்துள்ளார். நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது, 20,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன், இரண்டு சில்வர் குத்துவிளக்கை திருடி சென்றுவிட்டார். இதையறிந்த உறவினர் உமா, வெப்படை போலீசில் அளித்த புகார்படி, ஹரிஹரனை கைது செய்தனர்.