/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மளிகை கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
/
மளிகை கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
ADDED : மே 11, 2025 03:02 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, கோயிலாங்காடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 40; இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்து கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலையில் கடையை திறந்தார். அப்போது கடையின் மேற்கூரை தகர சீட்டு உடைத்து அகற்றப்பட்டிருந்தது. மேலும், கடையில் வைத்திருந்த, 5,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், எஸ்.பி.பி., காலனி பகுதியில், நேற்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் படியான நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், ஆத்துார் பகுதியை சேர்ந்த ராஜா, 30, என்பதும், மளிகை கடையில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார், மளிகை கடையில் திருடிய, 5,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.