ADDED : ஆக 15, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை
அடுத்த ஒடுவன்குறிச்சியை சேர்ந்த சுப்ரமணி மகன் மாதேஸ்வரன், 42;
கூலித்தொழிலாளி. இவர், நண்பர் சக்திவேலுடன், நேற்று முன்தினம்
ஒடுவன்குறிச்சி சக்தி மாரியம்மன் கோவில் அருகே நின்று
பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த
மணிகண்டன் என்பவருக்கும், இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு
ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், மாதேஸ்வரனை கீழே தள்ளி
அருகில் கிடந்த கல்லால் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த மாதேஸ்வரன்,
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.இதுகுறித்து
புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.
இவர் மீது பெண்ணை கேலி கிண்டல் செய்து தாக்கியதாக ஏற்கனவே வழக்கு
நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
