/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் சிக்கினார்
/
தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் சிக்கினார்
தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் சிக்கினார்
தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் சிக்கினார்
ADDED : ஆக 18, 2025 03:24 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ராஜாபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன், 35; இவருடைய தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலாவுக்கு புகார் வந்தது. புகார் மீது நடவடிக்கை எடுக்க, ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆயில்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் எஸ்.ஐ., சிவா ஆகியோர் கொண்ட குழுவினர், மணி-கண்டன் தோட்டத்தில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு மணி-கண்டன், இரண்டு பேரல்களில் சாராயம் காய்ச்ச ஊறல் வைத்தி-ருந்தது தெரிந்தது. இதையடுத்து, இரண்டு பேரல்களில் இருந்த, 100 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சிய மணி-கண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.