/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இளைஞர் காங்., புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு
/
இளைஞர் காங்., புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 09, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: இளைஞர் காங்.,கில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை, அகில இந்திய இளைஞர் காங்., கமிட்டி வெளியிட்டது.
இதில், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்., தலைவராக பெரியசாமி, மாவட்ட பொதுச்செயலாளராக மயில்சாமி, மாவட்ட செயலாளர்களாக பெரியசாமி, வெங்கடாஜலம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மற்றும் கிராம கமிட்டி தலைவர் சுந்தரம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி தலைவர் மகேஸ்வரன் ஆகியோர், ராசிபுரத்தை அடுத்துள்ள சிங்களாந்தபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில இளைஞர் காங்., செயலாளர் அருளானந்தம், அனைவரையும் வாழ்த்தினார்.