/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாரி மீது பைக் மோதி வாலிபர் சாவு
/
லாரி மீது பைக் மோதி வாலிபர் சாவு
ADDED : மே 21, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் முதலைப் பட்டிபுதுாரை சேர்ந்தவர் ரவி மகன் பிரசாந்த், 24; இவர், நேற்று 'யமாஹா ஆர்15' பைக்கில், நாமக்கல் - சேலம் சாலையில், கருங்கல்பாளையம் பிரிவு
பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி, வளைவில் திரும்ப முயன்றது. இதில் நிலைதடுமாறிய பைக், லாரியின் பின்புறம் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரசாந்தை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.