ADDED : ஜன 28, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: திருச்செங்கோடு அருகே, புல்லாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கார்த்திக், 28; சென்னையில், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தார்.
கடந்த, 15ல் பொங்கல் அன்று நல்லுார் அருகே, மொடக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு டூவீலரில், சித்தாளந்துார் வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், நேற்று உயிரிழந்தார். நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து, சோழசிராமணியை சேர்ந்த லாரி டிரைவர் மணி, 58, என்பவரை கைது செய்தனர்.

