/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இளைஞர் கூட்டமைப்பு விழா அண்ணாமலை துவக்கி வைப்பு
/
இளைஞர் கூட்டமைப்பு விழா அண்ணாமலை துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 20, 2025 07:55 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அசெம்பிளி யூத் பெடரேஷன், எனும், இளைஞர்கள் கூட்டமைப்பை, பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த அமைப்பு, ஜாதி, மதம், அரசியல் எதையும் சாராத இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும் நோக்கத்தோடும்  வழிகாட்டும் அமைப்பாகவும் செயல்படும். அதாவது விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், விளையாட்டு திறன், சுய முன்னேற்றம் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு துவங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம்., குரூப் தலைவர் இளைய வேந்தர், மார்ட்டின் குரூப் லீமா ரோஸ் மார்ட்டின், மேஜர் மதன் குமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன்,  சிங்கப்பூர் ஜெகதீசன், சேந்தமங்கலம் ஒன்றிய தலைவர் பாண்டியன் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கணபதி மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

