ADDED : ஜன 22, 2024 12:25 PM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் கணபதி ஆகாஷ், 23; டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துள்ளார்.
ஈரோட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம், தனது நண்பருடன் டூவீலரில் விழுப்புரம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த கணபதி ஆகாசை மீட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து, அவரது பெற்றோர் விருப்பப்படி, கணபதி ஆகாஷின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. பின், நேற்று மதியம், 2:00 மணிக்கு கணபதி ஆகாஷ் உடல் தாஜ்நகர் பகுதியில் உள்ள, அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அங், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, வருவாய்துறை அதிகாரிகள், கணபதி ஆகாஷ் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர்.