/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மூதாட்டியிடம் தாலிக்கொடி பறித்த வாலிபர் 8 மாதத்திற்கு பின் சிக்கினார்
/
மூதாட்டியிடம் தாலிக்கொடி பறித்த வாலிபர் 8 மாதத்திற்கு பின் சிக்கினார்
மூதாட்டியிடம் தாலிக்கொடி பறித்த வாலிபர் 8 மாதத்திற்கு பின் சிக்கினார்
மூதாட்டியிடம் தாலிக்கொடி பறித்த வாலிபர் 8 மாதத்திற்கு பின் சிக்கினார்
ADDED : அக் 28, 2025 01:51 AM
நாமக்கல், மூதாட்டியிடம், ஐந்து பவுன் தாலிக்கொடி பறித்த வழக்கில், எட்டு மாதத்திற்கு பின், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் அடுத்த துாசூரை சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி காமாட்சி, 75; கடந்த பிப்., 16ல், மர்ம நபர், காமாட்சியின் வாயை பொத்தி இழுத்து சென்று, அவர் அணிந்திருந்த, ஐந்து பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தலைமறைவானார். நாமக்கல் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் பாரத்மனோ, 26, என்பது தெரியவந்தது. தலைமறைவான அவரை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, கரட்டிப்பட்டி-வேப்பணம் சாலையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற நாமக்கல் எஸ்.ஐ., சாந்தகுமார் தலைமையிலான போலீசார், பாரத்மனோவை கைது செய்தனர்.விசாரணையில், செலவுக்காக அக்கம் பக்கத்து வீடுகளில் பாத்திரங்களை திருடியும், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் போதையில் இருப்பவர்களை மிரட்டி பணம் பறித்து ஜாலியாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், மூதாட்டி காமாட்சி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க பல நாட்கள் நோட்டம் விட்டு சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 'ஹோண்டா டியோ' பைக் பறிமுதல் செய்தனர்.

