/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாகனங்களை மறித்து இளைஞர்கள் குத்தாட்டம்
/
வாகனங்களை மறித்து இளைஞர்கள் குத்தாட்டம்
ADDED : ஜன 02, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகனங்களை மறித்து இளைஞர்கள் குத்தாட்டம்
பள்ளிப்பாளையம், ஜன. 2-
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பள்ளிப்பாளையம் சுற்று வட்டார பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, இளைஞர்கள் பலர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். அப்போது, பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே சென்று கொண்டிருந்த டிராவல்ஸ் வாகனத்தை, உள்ளூர் பகுதியை சேர்ந்த, 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வழிமறித்து நடனமாடிக்கொண்டிருந்தனர். இதனால், வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

