/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு
/
ராசிபுரம் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு
ராசிபுரம் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு
ராசிபுரம் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு
ADDED : செப் 11, 2025 01:52 AM
ராசிபுரம், :ராசிபுரம், கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 57; இவரது மனைவி கெஜலட்சுமி, 52; பூ மற்றும் சாக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். தம்பதியர், நேற்று செம்மாம்பட்டியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அணைப்பாளையம் அருகே சென்றபோது, 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத, 2 வாலிபர்கள், தம்பதியரை நிறுத்தி கொல்லிமலைக்கு வழிகேட்டனர்.
ராஜா பேசிக்கொண்டிருந்தபோது, கெஜலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த, 7.5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு வாலிபர்கள் தப்பி ஓடினர். அப்போது தம்பதியர் கூச்சலிட்ட சத்தம்கேட்டு ஓடிவந்த மக்கள், வாலிபர்களை விரட்டி சென்றனர். கொள்ளையர்களின் டூவீலர், எதிர் திசையில் வந்த கார் மீது மோதி கீழே விழுந்தது.
அவர்கள் இருவரையும் பிடித்து நகையை மீட்ட மக்கள், ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ., கீதா மற்றும் போலீசார், வாலிபர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார். அதில், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த மாணிக்கம் மகன் பைந்தமிழன், 24, தீர்த்தகிரி மகன் தங்கராஜ், 28, என்பது தெரிய வந்தது.
மேலும், இருவரும், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் தமிழ் இன்ஜினியர் மற்றும் சர்வேயர் என்ற கட்டுமான தொழில் நடத்தி வருவதாகவும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. அவர்கள் வந்த டூவீலரை பறிமுதல் செய்ததுடன், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.