/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாடன் செட்டி மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் மாநில உணவுத் துறை அமைச்சர் ஊட்டியில் உறுதி

ADDED : அக் 07, 2011 12:47 AM
ஊட்டி : 'கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள வயநாடன் செட்டி மக்களை மிகவும்
பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்,' என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு
ஆதரவாக உணவுத்துறை அமைச்சர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஊட்டியில்
நேற்று பிரசாரம் மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் புத்திச்சந்திரனை சந்தித்த
வயநாடன் செட்டி சமுதாய தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் கங்காதரன், துணை செயலாளர்
வேலுமணவேல், பொருளாளர் பத்மநாபன், ஆலோசனை குழு உறுப்பினர் சண்முகம்
தங்களின் ஆதரவை தெரிவித்தனர். நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர்
மில்லர், பந்தலூர் ஒன்றிய செயலாளர் அபு உடனிருந்தனர். உணவுத்துறை அமைச்சர்
புத்திச்சந்திரன் கூறுகையில், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் சுமார்
20 ஆயிரம் வயநாடன் செட்டி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாயத்தினர்
தற்போது பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தங்களை மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல காலமாக வலியுறுத்தி
வருகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது முதல்வரை
சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். பின்னர் தி.மு.க., ஆட்சி
வந்ததும் இவர்களின் கோரிக்கை கிடப்பில் போட்டப்பட்டது. தற்போது மீண்டும்
அ.தி.மு.க., ஆட்சி உள்ளதால், அந்த கோரிக்கையை நிறைவேற்ற முதல்வரிடம்
பேசுவேன். இந்நிலையில் இந்த சமுதாயத்தினர் அனைவரும் இந்த உள்ளாட்சி
தேர்தலில் அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு புத்திசந்திரன்
தெரிவித்தார்.