/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநகராட்சி குடிநீர் டேங்க் ஆப்பரேட்டர் மீது புகார்கராத்தே அசோசிேயஷன் சார்பில் மனு

ADDED : ஏப் 08, 2025 02:13 AM
மாநகராட்சி குடிநீர் டேங்க் ஆப்பரேட்டர் மீது புகார்கராத்தே அசோசிேயஷன் சார்பில் மனு
ஈரோடு:ஈரோடு மாவட்ட டிரடிசனல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில், தலைவர் மாணிக்கவாசகம், மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் குடிநீர் வினியோகிப்பாளராக நெடுஞ்செழியன் பணியாற்றி வருகிறார். நிரந்தர பணியாளரான அவர், சட்ட விரோதமாக தனக்கு பதிலாக வேறொருவரை நியமித்து பணி செய்கிறார்.
பல இடங்களில் கராத்தே பயிற்சி கூடம் அமைத்ததோடு, ப.செ.பார்க் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கராத்தே ஆசிரியருக்கான ஊதியத்தையும் சட்ட விரோதமாக பெற்று வருகிறார். மாநகராட்சி அதிகாரிகளை ஏமாற்றி சட்ட விரோதமாக செயல்படும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து ஈரோடு மாவட்ட டிரடிசனல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் நிர்வாகிகள் கூறியதாவது:
ஈரோடு, பெரியார் நகரை சேர்ந்த நெடுஞ்செழியன், 20 ஆண்டாக மாநகராட்சியில் பணியாற்றுகிறார். கையெழுத்து மட்டும் போட்டு விட்டு செல்கிறார். அரசு ஆவணங்களின்படி நெடுஞ்செழியன் என்ற பெயர் உள்ளது. பிறவற்றில் எஸ்.ஏ.நாவலன் என்ற பெயரை பயன்படுத்துகிறார். இவ்வாறு கூறினர்.