sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தராததால் அரசு பஸ் ஜப்தி

/

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தராததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தராததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தராததால் அரசு பஸ் ஜப்தி


ADDED : ஜூலை 25, 2011 11:02 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி அருகே கல்லட்டியில் பஸ் விபத்துக்குள்ளாகி மூன்றாண்டுகளாகியும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காததால், அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஊட்டியிலிருந்து பொக்காபுரம் சென்ற அரசு பஸ், கல்லட்டி மலை பாதை 36வது கொண்டை ஊசி வளைவை அடுத்துள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது; டிரைவர் கார்த்திகேயன், நடத்துனர் ஆலன், தலைமை ஆசிரியை இந்திராணி, முதுமலை சரகர் சுகுமாறன், மோசஸ் (6), புட்டுசாமி, ஸ்டேன்லி, ஜவரன், குருசித்தன், அஞ்சலி தேவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் பல குடும்பத்துக்கு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்நிலையில், இறந்த இந்திராணி, அஞ்சலிதேவி ஆகியோருக்கு இழப்பீடு வழங்கப்படாததால் இந்திராணியின் கணவர் நாராயணசாமி, அஞ்சலிதேவியின் கணவர் புரு÷ஷாத்தமன் ஆகியோர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் சார்பில் வக்கீல்கள் பாலாஜி, சிவகுமார் ஆஜராகி வாதாடினர். 'நாராயணசாமிக்கு 9 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், புரு÷ஷாத்தமனுக்கு 8 லட்சத்து 78 ஆயிரத்து 758 ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும்,' என கடந்த ஓராண்டுக்கு முன்னர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் இழப்பீடு தொகையை அரசு போக்குவரத்துக்கழகம் வழங்காததால் தீர்ப்பை அமல்படுத்தக்கோரி நாராயணசாமியும், புரு÷ஷாத்தமனும் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, '6 மாதங்களில் இழப்பீடு வழங்க வேண்டும்,' என தீர்ப்பளித்துள்ளார். ஆனால், 6 மாதங்களுக்கு மேலாகியும் இழப்பீடு தொகை வழங்காததால் அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய, நீதிபதி பிரேம்குமார் நேற்று உத்தரவிட்டார். இதன் பேரில், ஊட்டி-ஏக்குணி வழித்தட பஸ் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டது. புரு÷ஷாத்தமன் வழக்கில் மேலும் ஒரு பஸ் ஜப்தி செய்யப்படவுள்ளதாக வக்கீல்கள் பாலாஜி, சிவகுமார் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us