/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ் தற்காலிக ஓட்டுனர், நடத்துனர் முறையீடு
/
அரசு பஸ் தற்காலிக ஓட்டுனர், நடத்துனர் முறையீடு
ADDED : ஏப் 08, 2025 02:12 AM
அரசு பஸ் தற்காலிக ஓட்டுனர், நடத்துனர் முறையீடு
ஈரோடு:ஈரோடு அரசு போக்குவரத்து மண்டலத்தில் தற்காலிக ஓட்டுனர், நடத்துனராக பணி செய்தவர்கள், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று மனு வழங்கி கூறியதாவது: கடந்த ஜன., 9ல் அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தது. அப்போது நாங்கள் தற்காலிக ஓட்டுனர், நடத்துனராக பணியில் சேர்ந்தோம். விடுப்பு கூட எடுக்காமல் பணி செய்தோம். எங்களில் பலர் அதற்கு முன்பாகவே தற்காலிக பணி செய்தனர். சில நாட்களுக்கு முன், எங்களுக்கு பணி இல்லை எனக்கூறி அனுப்பி விட்டனர்.
கடந்த மார்ச், 21ல் அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. அதில் ஓட்டுனர் உரிமத்துடன், நடத்துனர் உரிமமும் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என தெரிவித்துள்ளது. இதனால் எங்களால் விண்ணப்பிக்க இயலவில்லை. எங்களைப்போல பல ஓட்டுனர் அல்லது நடத்துனர்களுக்கு ஒரு உரிமம் மட்டும் இருப்பதால், பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், ஏற்கனவே பணி செய்திருப்பதாலும், முன்னுரிமை வழங்கி விண்ணப்பிக்கவும், பணியிலும்
வாய்ப்பு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.