/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கந்துவட்டி கும்பலின் கொட்டத்தை அடக்க தீர்மானம்
/
கந்துவட்டி கும்பலின் கொட்டத்தை அடக்க தீர்மானம்
ADDED : ஜூலை 13, 2011 10:45 PM
கோத்தகிரி : 'கந்துவட்டி கும்பலின் கொட்டத்தை அடக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
கோத்தகிரியில் பா.ஜ., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நீலகிரி மாவட்டத்தில் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாய தொழிலாளர்களின் பொருளாதாரம் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி சீரழிந்து வருகிறது. குறிப்பாக, குன்னூர், கட்டபெட்டு மற்றும் மஞ்சூர் உள்ளிட்ட கிராமப்புற மக்கள் தங்களது உடமைகளை விற்று அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, காவல் துறை கந்துவட்டி கும்பலின் கொட்டத்தை அடக்கி மக்களை காப்பாற்றவேண்டும்; உள்ளாட்சி தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி ஆகிய அனைத்து பதவிகளுக்கும் பா.ஜ., சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது. நீலகிரியில் மூடப்பட்டுள்ள இன்கோ தேயிலை தொழிற்சாலைகளை புனரமைத்து மாநில அரசு திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தேயிலை வாரியத்தில் அறிவுறுத்தல் படி, பசுந்தேயிலைக்கு 65;35 விகிதாச்சாரத்தில் முரண்பாடற்ற விலை வழங்க வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பபட்டன. இதில், கோத்தகிரி மண்டல தலைவர் மணிகுண்டன் வரவேற்றார். மாவட்ட தலைவர் குமரன் தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் ராமன், மாநில எஸ்சி அணி தலைவர் அன்பு, நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் கவுரி வரதராஜன், வக்கீல் சங்கரன், ரமேஷ், ஆலன், ஐயன் லட்சுமணன், கம்பட்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.நிர்வாகி ஈஸ்வரன் நன்றி கூறினார்.

