/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முல்லைப்பெரியாறு அணையில்பலம் குறித்து அதிர்வலைச் சோதனை
/
முல்லைப்பெரியாறு அணையில்பலம் குறித்து அதிர்வலைச் சோதனை
முல்லைப்பெரியாறு அணையில்பலம் குறித்து அதிர்வலைச் சோதனை
முல்லைப்பெரியாறு அணையில்பலம் குறித்து அதிர்வலைச் சோதனை
ADDED : அக் 05, 2011 10:38 PM
கூடலூர் : முல்லைப்பெரியாறு அணையில் பலம் குறித்து மத்திய நீர்மின்
ஆராய்ச்சி நிலைய பொறியாளர் குழு நேற்று அதிர்வலைச் சோதனை நடத்தியது.
முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்த்துவது தொடர்பான தமிழக கேரள
மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உள்ளது.
கோர்ட் அறிவுறுத்தலின் பேரில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவினர் பல்வேறு
ஆய்வுகளை பெரியாறு அணைப்பகுதியில் நடத்தி வருகின்றனர். முக்கிய ஆய்வாக
அதிர்வலைச் சோதனை
(சோனிக் லாஜிங் டெஸ்ட்) துவங்கியது.
மத்திய நீர்மின் ஆராய்ச்சி நிலைய முதன்மை ஆராயச்சி அலுவலர் திரிபாதி,
ஆராயச்சி அலுவலர்கள் வர்சிகார், சாலுங்கே, கோடாக்கே ஆகியோர் முன்னிலையில்
சோதனை நடந்தது. அணையின் நீளமான 650வது அடியில் மூன்று இடங்கள் தேர்வு
செய்யப்பட்டு, 72 பாயின்ட்டுகளில் அதிர்வலை சோதனை நடந்தது.
அணையில் ஒரு பகுதியில் சுத்தியல் மூலம் அடிக்கும் அதிர்வலை மூலம்,
மறுபகுதியில் பொருத்தப்பட்ட தொழில்நுட்ப கருவியில் அணையின் பலம் குறித்து
அறியும் வகையில் இச்சோதனை நடந்தது. வரும் 10ம் தேதி வரை சோதனை நடைபெறும்.
இதன் அறிக்கையை இக்குழு, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஐவர்
குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளது.
தமிழக அரசு சார்பில் பெரியாறு அணை செயற்பொறியாளர் ராஜேஷ், உதவி
பொறியாளர்கள் ராஜகோபால், ஜெகதீஸ், கேரள அரசு சார்பில் கேரள அணைகள்
பாதுகாப்பு குழுத் தலைவர் பரமேஸ்வரன் நாயர், தலைமை பொறியாளர் லத்திகா உடன்
இருந்தனர்.

