/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அலுவலர்கள் பற்றாக்குறை மாணவர்களுக்கு பிரச்னை
/
அலுவலர்கள் பற்றாக்குறை மாணவர்களுக்கு பிரச்னை
ADDED : ஜூலை 14, 2011 10:08 PM
பந்தலூர் : பந்தலூர் தாலுகா பகுதிகளுக்கு ஒரே கிராம அலுவலர் மற்றும் ஒரே
வருவாய் ஆய்வாளர் மட்டுமே பணியில் உள்ளதால் மக்கள் அவதியடைகின்றனர்.
பந்தலூர் தாலுகாவில் ஆறு உட்கிராமங்கள் அமைந்துள்ளன. இதேபோல் 2
பிர்க்காக்களும் உள்ளன. ஆறு கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய
நிலையில், கடந்த சில ஆண்டுகளாக 3 கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமே
பணியாற்றி வந்தனர். கடந்த ஓராண்டு காலமாக இரண்டு பிர்காக்களுக்கும் ஒரு
வருவாய் ஆய்வாளர் மட்டுமே பணியாற்றி வருகிறார். தற்போது, ஒரு கிராம அலுவலர்
மட்டுமே பணியாற்றி வருகிறார். மேலும், ஆறு கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளை
சேர்ந்த மக்களுக்கும் சான்றிதழ்கள் போன்றவற்றை கவனிக்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது. சான்றிதழ் கோரி வரும் மாணவர்கள், மக்களுக்கு உடனடியாக
சான்றிதழ்கள் வழங்க முடிவதில்லை. எனவே, பந்தலூர் தாலுகா பகுதிகளுக்கு
போதுமான கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்களை நியமனம் செய்ய
வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

