sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மகளிர் குழு கூட்டமைப்பு கூட்டம்

/

மகளிர் குழு கூட்டமைப்பு கூட்டம்

மகளிர் குழு கூட்டமைப்பு கூட்டம்

மகளிர் குழு கூட்டமைப்பு கூட்டம்


ADDED : ஜூலை 25, 2011 11:02 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர் : பந்தலூர் அருகே அய்யன் கொல்லி, எருமாடு பகுதிகளில் செயல்படும் மகளிர் குழுக்களின் கூட்டமைப்பு கூட்டம் கல்லிச்சால் ஜி.டி.ஆர்.

பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் காசநோய், பொது சுகாதரம், தேர்தலில் பங்கேற்பது குறித்து விரிவாக பேசப்பட்டது. மேலும் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை போட்டியிட வைப்பது; குழு வேட்பாளர்களுக்கு அனைத்து மகளிர் குழுவினரும் ஒத்துழைப்பது; நோய்பரவுவதை தடுக்கவும், பொது சுகாதாரத்தை பேணிகாக்கவும் வீட்டிற்கு ஒரு தனி கழிப்பிடம் அமைத்து கொள்ளுதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாமரை மகளிர் குழு ஊக்குனர் நாராயணி வரவேற்றார்.

குறிஞ்சி மகளிர் குழு நிர்வாகி சாஜி தலைமை வகித்தார். கிரேசி மகளிர் குழு நிர்வாகி இந்திராணி, சினேகா மகளிர் குழு நிர்வாகி மேரி முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், வார்டு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சூரியா மகளிர் குழு நிர்வாகி ஓமனா நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us