ADDED : ஏப் 08, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
சத்தியமங்கலம்:கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தை சேர்ந்தவர் மாணிக்கம். திங்களூர் பஞ்., மக்கள் நல பணியாளர். இவருடைய மூன்றாவது மகன் யாதவ கிருஷ்ணன், 22; பிளஸ் ௨ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை குளியலறைக்கு விளக்கு போடுவதற்காக சமையல் அறையில் இருந்து லைன் எடுக்க, சுவிட்ச் பாக்சில் ஒயரை சொருகினார். அப்போது மின் கசிவு ஏற்பட்டு துாக்கி வீசப்பட்டதில் பலியானார். இது தொடர்பாக கடம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

