/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
என்.சி.சி., மாணவர்களுக்கு பயிற்சி
/
என்.சி.சி., மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 05, 2011 10:37 PM
குன்னூர் : குன்னூரில் துவங்கியுள்ள என்.சி.சி., மாணவ, மாணவியருக்கான பயிற்சியில் 600 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
மாவட்ட என்.சி.சி., சார்பில் சீனியர், ஜூனியர் பிரிவு மாணவ, மாணவியருக்கான
பயிற்சி முகாம் குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில்
துவங்கியது. லெப்டினென்ட் கர்னல். சுஷில் குமார் உத்தரவின் பேரில் துவங்கிய
முகாமில் மாவட்டத்தின் பல பள்ளிகளில் இருந்து 600 என்.சி.சி., மாணவ,
மாணவிகள் பங்கேற்றனர்.
குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜான்சன், பயிற்சியை துவக்கி வைத்தார்.
பயிற்சியில் என்.சி.சி., மாணவர்களின் பண்புகளை மேம்படுத்துதல், தலைமைப்
பண்புகளை வளர்த்தல், விளையாட்டு துறையில் ஊக்குவிப்பு அளித்தல், துப்பாக்கி
சுடுதல் உட்பட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தவிர, ராணுவ நிர்வாக முறை,
ஒழுக்கம் குறித்தும் ராணுவ அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்படுகிறது. ரத்த
தானம், மரம் நடுதல், யோகா உட்பட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

