ADDED : ஏப் 08, 2025 02:12 AM
மாடு திருடிய 3 பேர் கைது
பவானி:அம்மாபேட்டை அருகே மாரப்பனுாரை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 50; இவர் வளர்த்து வரும் பசுமாட்டை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தொழுவத்தில் கட்டியிருந்தார். நேற்று காலை பார்த்தபோது மாட்டை காணவில்லை. அம்மாபேட்டை போலீசில் புகாரளித்தார். எஸ்.ஐ., கார்த்தி தலைமையிலான போலீசார், பூதப்பாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு டாட்டா ஏஸ் வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி டிரைவர் உள்ளிட்ட மூவரிடம் விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக கூறவே, மூவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம் அய்யப்பன், 30, முருகேசன், 38, விஜயசந்திரன், 23, என தெரிந்தது. மாதேஸ்வரனின் பசு மாட்டை திருடிச்சென்று விற்று விட்டு, வாகனத்தில் திரும்ப வந்தது தெரிந்தது. மூவரையும் கைது செய்தனர்.

