sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அருவங்காட்டில் அச்சுறுத்தும் "மஞ்சள் மழை'

/

அருவங்காட்டில் அச்சுறுத்தும் "மஞ்சள் மழை'

அருவங்காட்டில் அச்சுறுத்தும் "மஞ்சள் மழை'

அருவங்காட்டில் அச்சுறுத்தும் "மஞ்சள் மழை'


ADDED : அக் 05, 2011 10:37 PM

Google News

ADDED : அக் 05, 2011 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர் : அருவங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் 'மஞ்சள் மழை' பெய்வதாக மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு, வெலிங்டன் உட்பட பகுதிகளில் 100க்கணக்கான குடியிருப்புகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள வீடுகளின் கூரை மீதும், நீர் தேக்க தொட்டி, நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மீது மஞ்சள் நிறத்தில் ஒரு வகை திரவம் படிகிறது. சில சமயங்களில் இந்த திரவம் பொதுமக்களின் மீதும் பட்டு, அவர்களது உடையில் மஞ்சள் நிற கரை ஏற்படுகிறது.

இந்த அசாதாரண சம்பவம் மக்கள் மத்தியில் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகத்திடம் சம்மந்தப்பட்ட பகுதி மக்கள் புகார் கூற, வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு இத்தகவலை கன்டோன்மென்ட் நிர்வாகத்தினர் அனுப்பியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எவ்வித தகவலும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு துணைத் தலைவர் பாரதியார் கூறுகையில், ''அருவங்காடு, வெலிங்டன் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் மழை பெய்வதாக மக்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us