/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 76 லட்சத்தில் உலர் களத்துடன் தரம் பிரிக்கும் கூடாரம் விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு

ADDED : பிப் 28, 2025 10:24 PM
ஊட்டி , ;நீலகிரி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலர் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியதாவது:
மாநில அரசு அனைத்து துறைகளில் மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்படுகிறது.
அதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல்; வேளாண் விலை பொருட்களை தரம் பிரித்து, பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்தல்; அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பீட்டை தடுத்தல்; தரம் பிரித்தல்; சந்தைப்படுத்துதல்; மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றின் பயன்கள் குறித்து பயிற்சிகள், விளம்பரங்கள் மற்றும் பிரசாரங்கள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தவிர, நவீன குளிர்பதன கிடங்குகள் அமைத்து விலை பொருட்களை சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் சமயத்தில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்படுகிறது.
மேலும், ஊராட்சியில் உள்ள விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் விலை பொருட்களான பூண்டு, உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட்போன்ற விவசாய விலைப் பொருட்களை விவசாயிகள் அங்கு கொண்டு வந்து உலரவைக்கலாம்.
பின், தரம் பிரித்து விற்பனை செய்து கொள்ளும் வகையில் உலர் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.