/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி, குன்னுாரில் ஐகோர்ட் நீதிபதி ஆய்வு
/
ஊட்டி, குன்னுாரில் ஐகோர்ட் நீதிபதி ஆய்வு
ADDED : பிப் 22, 2025 08:07 AM
ஊட்டி; ஊட்டி, குன்னுாரில், ஐகோர்ட் நீதிபதியும், மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான, நக்கீரன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், பாரம்பரிய கட்டடங்களில், நீதிமன்றங்கள் இயங்குகின்றன. அந்த நீதிமன்றங்களில் இடம் நெருக்கடி உள்ளதுடன், வக்கீல்கள் மற்றும் வழக்காளிகள் ஒருங்கே, நீதிமன்ற பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தவிர, கோப்புகள் பாதுகாப்பதிலும் சிக்கல் உள்ளது.
இதனை மேம்படுத்த ஏதுவாக, மாவட்டத்தில் புதிய நீதிமன்றங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஐகோர்ட் நீதிபதியும், நீலகிரி மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான நக்கீரன் தலைமையிலான குழு, நேற்று குன்னுார் மகளிர் கல்லுாரி அருகே அமைந்துள்ள பகுதியில், ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தனர். இந்த பணிகளை விரைவு படுத்த அதிகாரிகளிடம் ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, இந்த குழுவினர், ஊட்டி பட்பயர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பார்வையிட்டு கோப்புகளை ஆய்வு செய்தனர். அதன்பின், ஊட்டி கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள, பழமையான பாரம்பரிய கட்டடத்தை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட நீதிபதி முரளிதரன், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சசிகலா, தொழிலாளர் கோர்ட் நீதிபதி சந்திரசேகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.