/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'நீட்' தேர்வு எழுதிய 787 மாணவர்கள் 48 பேர் 'ஆப்சென்ட்'
/
'நீட்' தேர்வு எழுதிய 787 மாணவர்கள் 48 பேர் 'ஆப்சென்ட்'
'நீட்' தேர்வு எழுதிய 787 மாணவர்கள் 48 பேர் 'ஆப்சென்ட்'
'நீட்' தேர்வு எழுதிய 787 மாணவர்கள் 48 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மே 05, 2024 11:27 PM
ஊட்டி;ஊட்டியில் நடந்த நீட் தேர்வில், 787 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
ஊட்டி ரெக்ஸ் பள்ளியில் 'நீட்' தேர்வு நடந்தது. மாவட்டத்தில் ஒரே மையம் என்பதால், கூடலுார், கோத்தகிரி, பந்தலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்றோர் மாணவ- மாணவிகளை அழைத்து வந்திருந்தனர்.
தேர்வர்கள் காலை, 11:00 மணியில் இருந்து தேர்வு எழுதும் மையத்துக்குள் ஒவ்வொரு நபராக சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகள் 'பயோ மெட்ரிக்' எடுத்து, புகைப்படம் எடுக்கப்பட்டது.
நுழைவு சீட்டில் 'ஹாலோகிராம் ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது. மதியம், 1:30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்பட்டது.
2:30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மாலை 5:20 மணி வரை நடந்தது. தேர்வு எழுத, 835 பேருக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில், 48 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. 787 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.