
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;பந்தலுார் பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
இதனால், வனப்பகுதியில் மட்டுமின்றி விவசாய தோட்டங்களும் காய்ந்து கருகி வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு சில தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில், கோடை வெயிலிலிருந்து விவசாயத்தை காப்பாற்றுவதற்கு ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் தெளிப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் வெயிலில் விவசாய பயிர்கள் கருகாமல், ஓரளவு காப்பாற்ற முடியும்.

