நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுாரில், 'இயற்கையை பாதுகாப்போம்' தலைப்பில் சைக்கிள் மற்றும் பழங்கால இருசக்கர வாகன பேரணி நடந்தது.
குன்னுார் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கர்னல் ரமேஷ் குமார் (ஓய்வு) தேசிய கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் பாதிரியார் ஜான் பிரிட்டோ தலைமை வகித்தார். 'இயற்கையை பாதுகாப்போம்' என்பதை வலியுறுத்தி, சைக்கிள் மற்றும் பழங்கால இரு சக்கர வாகனங்கள் அணிவகுப்பு நடந்தது.
அதில், 1961 மற்றும் 1970 ஆண்டின், பஜாஜ், வெஸ்பா, சேட்டக், யெஸ்டி பைக் உட்பட இருசக்கர வாகனங்களில், முன்னாள் மாணவர்கள், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வலம் வந்தனர். நிகழ்ச்சியை, குன்னுார் டி.எஸ்.பி., குமார் துவக்கி வைத்தார்.

