/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பேரணி
/
100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 08, 2024 10:16 PM
ஊட்டி:ஊட்டி இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட, கல்லக்கொரை கிராமத்தில், 100 சதவீத ஓட்டளிப்பது குறித்து, விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது.
லோக்சபா தேர்தலில், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட, தகுதியுடைய அனைவரும், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து, பல்வேறு கட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக, கல்லக்கொரை கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதனை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக, 'செல்பி பாயிண்ட்' அமைத்து, புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, கையெழுத்து இயக்கம், கலை நிகழ்ச்சி மற்றும் ஓவிய போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து, பெர்ன்ஹில் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு மூலம், மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு பணிகளை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

