/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
100 சதவீதம் வாக்களிப்பது அவசியம்: பலுான் பறக்கவிட்டு விழிப்புணர்வு
/
100 சதவீதம் வாக்களிப்பது அவசியம்: பலுான் பறக்கவிட்டு விழிப்புணர்வு
100 சதவீதம் வாக்களிப்பது அவசியம்: பலுான் பறக்கவிட்டு விழிப்புணர்வு
100 சதவீதம் வாக்களிப்பது அவசியம்: பலுான் பறக்கவிட்டு விழிப்புணர்வு
ADDED : ஏப் 04, 2024 11:50 PM

கோத்தகிரி:கோத்தகிரி தாலுகா அலுவலக வளாகத்தில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பலுான் பறக்கவிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநிலத்தில் வரும், 19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தகுதியான அனைவரும் தவறாமல், கண்டிப்பாக ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, தேர்தல் ஆணையம், மாவட்டம் முழுவதும், மக்கள் கூடும் இடங்களில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, கோத்தகிரி தாலுகா அலுவலக வளாகத்தில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர், தேசிய கொடி வண்ணங்களில் பலுான்களை பறக்கவிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோத்தகிரி தாசில்தார் கோமதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.